தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஆங்கிலேயர்கள் இருந்தபோது 1924இல் காவிரி ஒப்பந்தம் கர்நாடகா தமிழ்நாடு போட்டோம். 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டோம்.  1974 இல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்…  தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை…

ஏனென்றால் MGR ஐயா கட்சி ஆரம்பிச்சிட்டாரு. எந்த நேரத்திலும் DMK-வை டிஸ்மிஸ் பண்ணிடுவாங்கன்னு தெரியும்..  காங்கிரஸோடு ஒத்துப் போக வேண்டும் என்று DMKவுக்கு நிர்பந்தம். கர்நாடகா காங்கிரஸோடு ஒத்துபோக வேண்டிய நிர்பந்தம். அதனால் தமிழ் கலாச்சாரம் தஞ்சாவூர் மண், டெல்டா  பகுதியினுடைய உரிமையை முதன்முதலாக விட்டுக் கொடுத்த தேதி 1974. காவேரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க திராவிட முன்னேற்ற கழகம் தவறியது.

அதனால என்ன நடந்துச்சு ?  கர்நாடகாவில் ஐந்து அன்னைகள் கட்டப்பட்டது.  நம்முடைய அனுமதி இல்லாமல் ஹேமாவதி, கபினி, ஹாரங்கி உள்ளிட்ட 5 அணைகள் கட்டப்பட்டது. ஏனென்றால் இவுங்க ஆட்சியை பாதுகாக்க வேண்டும். சர்க்காரியா கமிஷன் ஊழல் புகாரியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக… டெல்டா பகுதி,  விவசாய பெருமக்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்து… காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறி விட்டார்கள் 1974 என பேசினார்.