விண்வெளியில் பல்வேறு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில், பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட் SPECULOOS-3 b என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் பூமியை போன்று காணப்படும் இந்த கிரகம் அல்ட்ராகூல் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகக் கூறியுள்ள விஞ்ஞானிகள், இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது வெறும் 17 மணி நேரம் தான் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சூரியனை விட பாதி வெப்பம் மற்றும் 100 மடங்கு குறைவான ஒளிர்வு கொண்ட அதி-குளிர்ச்சியான சிவப்பு  குள்ள  நட்சத்திரத்தை சுற்றி காணப்படும் இரண்டாவது கிரக அமைப்பு ஆகும். இங்கே நட்சத்திரத்தை சுற்றி வர, சுமார் 17 மணி நேரம் எடுக்குமாம். இருப்பினும், பகல் மற்றும் இரவுகள் ஒருபோதும் முடிவடையாது.