கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் இந்த மாதம் ஐந்தாம் தேதி முர்ரே தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாயும் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை எடுத்து படுக்கையில் தூக்கி வீசி உள்ளார் முர்ரே.

தொடர்ந்து குழந்தையை அடித்து கடுமையாக துன்புறுத்திய நிலையில் குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கியது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்ட கண்களில் ரத்தம் கசிந்து மூளை வீங்கி உள்ளதாகவும், மருத்துவ அறிக்கை கூறுகின்றது. அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு குழந்தையை உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் குழந்தையின் கொடூர மரணத்திற்கு காரணமான தாயின் கள்ளக்காதலனை போலீசார் தொலைபேசி தேடி வருகிறார்கள்.