திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு சொல்றாரு….

தமிழ்நாட்டில் 3000 மடங்கு போதை வஸ்துகள் கூடி விட்டது. மூன்றை வருஷத்துக்கு முன்னாடி டிஜிபி சொன்னது.  இந்த ஆட்சி வரும்பொழுது அந்த 3000,  4000 ஆகி இருக்கும்.  முழு முயற்சி எடுத்து முதல்வர் அதை கட்டுப்படுத்திட்டாங்க..

பிற மாநிலங்களில் இருந்து….. இன்னும் வெளிப்படையாக சொன்னால்,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார் பண்ணி அந்த மாநிலங்களில் இருந்து வருது…

அதைவிட மிக மோசமானது ஆன்லைன் ரம்மி. அதை தடுப்பதற்கு அரசு மசோதா கொண்டு வருது.  முதலில் அமைச்சரவை கூட்டம் முடிவெடுத்து, இதை தடை செய்யனும்னு சொல்லி கவர்னருக்கு அனுப்புது. கவர்னர் ஒப்புதல் தந்து இருக்காங்க என தெரிவித்தார்.