2012 -2016ம் வருடம் அதிமுக ஆட்சி காலத்தில் அதானிடம் இருந்து தமிழக அரசு மின்வாரியத்திற்கு வாங்கி நிலக்கரியில் 6000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருக்கிறது. இது குறித்து பேசி அறப்போர் ஜெயராமன், 2.44 கோடி மெட்ரிக் டன் அளவில் நிலக்கரியானது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .

இதில் தர மற்ற நிலக்கரியை அதிக விலை கொடுத்து அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனால் அதானி மட்டும் 3000 கோடி அளவிற்கு இதில் ஊழல் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.