தமிழகத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அதன்படி இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.