ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. RCB அணி நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 18 முறை டக்அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை RCB அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டக்அவுட்டானார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக்அவுட்டான தினேஷ் கார்த்திக்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா 17 முறை, பியூஷ் சாவ்லா 16 முறை டக்அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது