கடந்த 20 ஆம் தேதி நடந்த போட்டியில் சென்னை அணி டாஸ் செய்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி 20 ஓவர்களில் 218க்கு 5 ரன்கள் குவித்தது. டூப்ளசிஸ் 54, விராட் 47, ரன்களை குவித்தார்கள். அதன்பிறகு 21 ரன்கள் எடுத்ததால் பிளே ஆப் உறுதி செய்துவிடலாம் என்று இலக்கோடு களமிறங்கிய நிலையில் சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது, முதல் பலிலேயே ருதுராஜ் ஆட்டம் இழந்தார்.

கடைசியில் 191 /7 ரன்கள் மட்டுமே குவித்தது. தோனி 25 ரன்னில் அவுட் ஆக ஜடேஜா 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார். இதனை அடுத்து சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறிய து. இதனால் CSK ரசிகர்கள் கவலையடைந்தார்கள். இந்நிலையில்CSK டி.ஷர்ட்டில் ஐபிஎல் வீரர்களின் ஆட்டோகிராப் வாங்கும் சிறுவர்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவர்கள் கூறுகையில், CSK இந்த டைம் ஜெயிக்கலனாலும் பரவால நம்ம கிட்ட 5 கப் இருக்கு”.. தோனி கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும்னு ஆசை என்று கூறியுள்ளனர்.