ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய RR அணி 174 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதையடுத்து மே 24ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியை RR அணி எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் RCB-க்கு எதிரான போட்டியில், 4 முக்கியமான கேட்சுகளை பிடித்த ரோவ்மன் போவெல் கடைசி நேர பரபரப்பில் 16 ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்து RR அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். RR அணியின் வெற்றி குறித்து பேசிய அவர், “கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்ய விடாத அளவுக்கு RCB எந்த கஷ்டத்தையும் கொடுக்கவில்லை. பிளேஸிஸ் கொடுத்த கேட்ச்சை பிடிக்காமல் போயிருந்தால் வெற்றி வாய்ப்பு பறிபோயிருக்கலாம்” என்றார்