ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்  LBW கொடுக்கப்படாதது பேச பொருளாக மாறி உள்ளது. எலிமினேட்டர் போட்டியின் 15வது ஓவரில் அவேஷ் வீசிய பந்தை RCB வீரர் தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அவேஷ் LBWக்கு அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார்.

DK ரிவ்யூ செல்ல, அல்ட்ரா எட்ஜில் பேடில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், பந்து பேட்டில் பட்டதாக 3ஆவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார். இதனால் RR வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேட்ச் பிக்சிங் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்