நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். RCB அணிக்கு எதிரான Eliminator போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற RR அணி குவாலிஃபையர் – 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கண்ணீரோடு வெளியேறியது RCB அணி.

லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர்களை பட்டாளத்தை கொண்ட RCB அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது