RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர்களை பட்டாளத்தை கொண்ட RCB அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின்  தோல்வியை தொடர்ந்து கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல் லில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இதனால்அவருடைய  ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.