ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக RCB வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். RR அணிக்கு எதிரான நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரிலிருந்து பெங்களூரு அணி வெளியேறியதை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவரை கௌரவித்து வழி அனுப்பினார்.