RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர்களை பட்டாளத்தை கொண்ட RCB அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RCB அணிக்கு எதிரான Eliminator போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற RR அணி குவாலிஃபையர் – 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மே 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் SRH அணியை எதிர்த்து விளையாடும். குவாலிஃபையர் – 2 சுற்றில் வெற்றிபெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.