உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த whatsapp செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது whatsapp கால் நோட்டிபிகேஷனில் ரீப்ளை செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உங்களுக்கு வாட்ஸ் அப்பில் யாராவது கால் பண்ணினால் அந்த அழைப்பை உங்களால் ஏற்க முடியவில்லை எனில் அந்த காலிலேயே ரிப்ளை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பயனாளர் ஒருவர் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் கால் செய்யும்போது decline, reply என்கிற இரண்டு ஆப்ஷன் காட்டப்படுகிறது. நீங்கள் ரிப்ளை என்ற ஆப்ஷனை அழுத்தினால் உங்கள் கால் எதற்காக கட் ஆகிறது என்ற மெசேஜ் நேரடியாக அந்த பயனருக்கு சென்று விடும். இந்த புதிய அப்டேட் சில மெட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.