உலக அளவில் இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். செல்போன் பயன்பாடு அதிகரித்த நிலையில் தினம் தினம் புதுப்புது செயலிகளும் வரத் தொடங்கியுள்ளது. வேலை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பலவற்றுக்கு புதுப்புது செயலிகள் வரும் நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் முன்னணி நிறுவனங்களின் செயலிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 14.3 செயலிகள் விதிகளை மீறியதால் கூகுள் பிளே ஸ்டோரில் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளும் விதிகளை மீறியதால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.