சென்னை மெரினா கடற்கரையில் விளையாடச் சென்ற சுதர்சன் என்ற வாலிபர், எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி மாயமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் கண் முன்னே கடலுக்குள் சென்ற மகன் இன்னும் கரை திரும்பாததை எண்ணி நிலைகுலைந்து போயுள்ள அவரது தாய், கடந்த சில மணிநேரங்களாக மெரினா கடற்கரையில் மகனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி, சமூக வலைத்தளங்களில் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது. ​

குறிப்பாக, தனது மகன் தீவிரத் தொண்டனாக இருந்து “நான் அவருக்குத்தான் ஓட்டு போடுவேன்” என்று கூறி வந்ததை அந்தத் தாய் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு பையனுக்குத் தாயான தான், உரிமையோடு தாய் ஸ்தானத்தில் இருந்து கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், “யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை, சிஎம் விஜய் கிட்டயாவது சொல்லி என் பிள்ளையைக் காப்பாற்ற உதவுங்கள்” என்று கண்ணீர் மல்கக் கெஞ்சியுள்ளார்.

மாயமான சுதர்சனை மீட்கும் பணிகள் கடலோரக் காவல் படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதல்வருக்கு அந்தத் தாய் விடுத்த இந்தக் கோரிக்கை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.