தமிழகத்தையே உலுக்கிய கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், இன்று அதிகாலையில் மேலும் ஒரு கொடூரனைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும் பொதுமக்களும் விடிய விடிய நடத்திய தீவிர சாலைமறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறி, பலத்த பதற்றம் நிலவியது.
இந்நிலையில், சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவனை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்திக் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது நபரும் சிக்கி உள்ளான்.
