வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

கனிம வளங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தியதற்காகவே தன் மீது திட்டமிட்டுப் பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வேலை என்றும் விளக்கம் அளித்து அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

“>

 

தவெகவினர் அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது எனத் தலைமை எச்சரித்திருந்த சூழலில், வேலூரில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.