மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. இந்த நாட்டில் குழந்தைகளுக்கு ஒரு வினோத போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்தில் காட்டுப் பூனைகளின் அதிகரிப்பால் உள்நாட்டில் வசிக்கும் பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள், பூச்சிகளின் இருத்தல்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காட்டுப் பூனைகள் வேட்டை போட்டியில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.

இதுவரை வயது வந்தோர் காட்டு பூனைகள் வேட்டை போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இந்த வருடம் 14 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள், குழந்தை நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விழா ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்துள்ளனர். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக இந்திய மதிப்பில் 12,735 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.