கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,  ஒருவர் உழைப்பால் மற்றவர் வாழ்வதும்,  அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் நிலைமையும் அதிகரித்து விட்டது, தமிழகத்திற்கு நல்லது செய்வோம், உழைப்போம் என்று கூறிக்கொண்டு….  பொய் வாக்குறுதிகளை….

நிறைவேற்ற முடியாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழக மக்களை ஏமாற்றி….  தந்திரமாக திமுக கொல்லைப்புறத்தினால் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்கள் மீது பல்வேறு வரி சுமைகளை சுமத்தினார்கள். குறிப்பாக இரண்டு முறை மின்கட்டண உயர்வு,  தொழில் நகரமான கோவை,  திருப்பூரில் சிறு குறு நடுத்தர மற்றும் தொழில்கள் ஸ்தம்பித்ததை நீங்கள் அறிவீர்கள்.

தொழில் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதையும் உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். மின் கட்டண உயர்வோடு இந்த திமுக அரசு சொத்து வரி, வீட்டு வரி மட்டும் கடை வரி, தொழில்வரி உட்பட அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தியதும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலைகள் விண்ணை முட்டி உள்ளன.

மேலும் வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனை வரி, அலுவலகங்கள் சோதனை என்ற பெயரில் அடிக்கடி பல மடங்கு அபராதம் விதிக்கும் நிலையினை வணிகர்கள்  கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.பதிவு கட்டணம் முதல் அரசின் அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்வை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் விடியா தி.மு.க ஆட்சியாளர்கள் தற்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு வருகின்றனர்.