சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்ட போலி ஆவணம் மூலம் ஒப்பந்தம் மேற்கொண்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலை தொழிலாளர் நல சங்க ஆலோசகர் இளங்கோவன் புகாரில் கருப்பூர் போலீசார் ஜெகநாதனை கைது செய்தனர்.அவர் போலி ஆவணங்கள் தயாரித்து கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், பேராசிரியர்கள் சிலரை மிரட்டியதாக புகார் அளித்த நிலையில் காவல்துறை விசாரணையின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். துணை வேந்தராக பணியாற்றும் அதேவேளையில் வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார்..

ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் கைது என்பது சேலம் முழுவதும் அல்லாமல் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள கல்லூரி அனைத்தையும் கவனிக்கும் முக்கியமான தலைவராக இருப்பார்.

அவருடைய கட்டுப்பாட்டில் தான் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்தும் நடைபெறும். அப்படி இருக்கும் நிலையில் அவரே போலி ஆவணங்களை தயாரித்து அரசு ஊழியர்களை மிரட்டியதாக ஜெகநாதன் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த புகார் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகநாதனை பொருத்தவரை கடந்த 2021 இல் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது முதல் இடையில் பல்வேறு சர்ச்சைகள் புகார்கள் அவர் மீது அவ்வப்போது எழுந்து வந்தது. ஆனாலும் இது  ஒரு முக்கியமான புகார் என்பதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்..