எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக, 3,000 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2022 வரை, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் பென் டிரைவில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்தப் பென் டிரைவை தடயவியல் ஆய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவகவுடா குடும்பத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.