நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு அளித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் மனுதரப்பட்டது
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிட்டத்தட்ட 72 பக்கங்கள் கொண்ட மனு  தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், கடந்த நூற்றாண்டில் 50 சூறாவளிகளை எதிர்கொண்ட தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையுடன், தொடர்ந்து அச்சுறுத்தலில் உள்ளது. தென் மாவட்டங்களில் சமீபகாலமாக பெய்து வரும் தொடர் மழை, பிந்தைய துயரங்களை மேலும் அதிகரிக்கிறது.

மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, தி.மு.க., மற்றும் உயர் அதிகாரிகள் மாண்புமிகு யூனியன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர். தற்போதைய நிலைமை மற்றும் தமிழக அரசு மூலம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்தும். பதில், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதியின் முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு விரிவான 72 பக்க குறிப்பாணையை அவர்கள்கொடுத்தனர்.

SDRF இன் கீழ் வரையறுக்கப்பட்ட நிதி மட்டுமே இருப்பதால், சேதமானது தற்போதைய வளங்களை விட அதிகமாக உள்ளது. இந்த முன்னோடியில்லாத சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசிடம் இருந்து கணிசமான உதவியை தமிழ்நாடு ஆர்வத்துடன் நாடுகிறது” என பதிவிட்டுள்ளார்..

ஏற்கனவே எஸ்டிஆர்எஃப் இல் நிதி குறைவாக இருப்பதாகவும், நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பெரிய சவாலான நேரத்தில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 100 ஆண்டுகளில் 50 புயல்களை தமிழ்நாடு எதிர்கொண்டுள்ளது. எஸ்டிஆர்எஃப் இல் 450 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 900 கோடி தர வேண்டும். அந்த அடிப்படையில் ரூபாய் 450 கோடி இரண்டாவது தவணை கொடுத்துள்ளனர். ஆனால் தமிழக அரசு ஏற்கனவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை தான் கொடுத்துள்ளனர். மேலும் அதிகமாக வேண்டும். தேசிய பேரிடர் அளவிற்கு ஏற்பட்டது. தேசிய பேரிடராக நீங்கள் அறிவிக்கவில்லை. இருப்பினும் தொகை மட்டும் கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் இன்று இந்த கோரிக்கை மத்திய அமைச்சருக்கு வைக்கப்பட்டுள்ளது.