புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, ஸ்டாலினும்,  உதயநிதியும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.  உங்களுக்கு கவலை இல்லை. நீங்க பண போதையிலும், அதிகார போதையிலும் இருக்கிறீங்க..  எங்க மக்கள்,  இளைஞர்கள் எல்லாம் மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

ஒரு எல்லை தான்…  அந்த  எல்லைக்கு மேல போனால்…. பல வழக்குகளை பார்த்தாச்சு….  இந்த சமுதாயத்தில் பல சிறை பறவைகள் இருக்கிறார்கள்…  அப்படியே களப்போராளிகள் எல்லாம் இருக்குறாங்க… டாஸ்மார்க் உடைச்சா பெரிய வழக்கு எல்லாம் வந்து விடாது. என்ன வன்முறை ? எது பொதுச்சொத்து…  இந்த சாராய பாட்டிலும்.. சாராயமும் தான் அரசினுடைய பொது சொத்தா ? இதுதான் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை நடத்துற லட்சணமா ? இது வேண்டாம் என்றால் அதை நீங்கள் நீக்கிக் கொள்ளுங்கள்.

மதுவிலக்கு கேட்கிறோம்…  நீ திட்டமிட்டு மதுவை இங்கே திணிக்கிற…  அப்படியெல்லாம் நாங்கள் ஓய மாட்டோம். இதையெல்லாம் இளைஞர்கள் உணர்த்து புதிய தமிழகமாக பயணிக்க வேண்டும். புதிய தமிழகம் இன்று அல்ல,  27 ஆண்டுகள் அல்ல… 127 ஆண்டுகளானாலும் புதிய தமிழகம் இந்த மக்களுக்காக போராடிக் கொண்டுதான் இருக்கும்….  ஒரு நாள் இந்த சிவப்பு,  பச்சை கொடி இந்த கோட்டையில் பறக்க வைப்போம்… புதிய தமிழகம் இந்த மக்களுக்கு அதிகாரம் வாங்கி கொடுக்கும் வரை போராடிக் கொண்டே இருக்கும் என்று சொல்லி விடைபெறுகிறேன் என பேசி முடித்தார்.