தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூன் 12ஆம் தேதி ஆகும். இதனைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.