பெரும்பாலும் மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காக சிறந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வார்கள் . அதற்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் வயதான காலத்தில் 5000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் 2015 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் வருமான வரி செலுத்துபவர்களும் இந்த திட்டத்தில் சேர முடியாது. அதேபோல கணவன் மனைவி இருவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் பலனை பெறலாம். கணவன் இறந்த பிறகு மனைவிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்து முதலீடு செய்யலாம். வங்கிக்கு சென்று இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து கணக்கை தொடங்கலாம்.