மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட கோயில்களை சீரமைக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கியது தமிழக அரசு.

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக 26 திருக்கோவில்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் அலங்கார மண்டபம், ஏகாதேசி மண்டபம், திருமதில் சுவர் மற்றும் தெப்பத்தின் சுவர், அதன் கட்டுமானங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல திருக்கோவில் அலுவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் முதல் கட்டமாக 26 கோயில்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கட்டடங்களை சீரமைப்பதற்காக முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தத் தொகையினை விரைவாக அலுவல் ரீதியாக விரைந்து கொடுக்கவும், இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மண்டல அலுவலர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் கண்காணிப்புடன் இந்த 26 கோயில்களையும் சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அந்தந்த 26 கோயில்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் அனைத்து விதமான கட்டுமானங்களில் எந்தெந்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தெப்பக்குளம், அலங்கார மண்டபங்கள், மேலும் பக்தர்கள் பயன்படுத்தும் அந்த வளாகங்கள், எந்தெந்த பகுதிகள் சீரமைப்பு இல்லாமல் இருக்கிறதோ அனைத்தையும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 மாதங்களுக்குள் பெருமழையால் பாதிப்படைந்ததாக  26 கோயில்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது அந்த கோயில்களை சீரமைக்க இந்து சமய அறநிலைத்துறை வலியுறுத்துள்ளது.