சற்றுமுன் வீடியோ வெளிட்ட பிரேமலதா விஜயகாந்த்,இன்று காலை வெளியானது வழக்கமான மருத்துவமனை அறிக்கை தானே தவிர,  அதில்  பதற்றப்படவோ… பயப்படவோ ஒன்றும் இல்லை.  கேப்டன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்,  சிறந்த முறையிலே இங்கு மருத்துவ நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்களுடன்,  நானும் அவர்களுடன் இருந்து தலைவரை நல்ல படியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வெகு விரைவில் தலைவர் அவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் நிச்சயம் சந்திப்பார் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தனை பேருடைய பிரார்த்தனையும்,  அவர் செய்த தர்மம் நிச்சயம் தலைவரை காப்பாற்றும். எனவே கடைகோடியில்  இருக்கும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும், எல்லாரையும் நான் கேட்டுக்கொள்வது யாரும் பயப்பட வேண்டாம். கூடவே இருந்து கண்ணம் கருத்துமாக தலைவரை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார். அது எப்போ என்பது உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். அதுவரையும் யாரும் எந்தவிதமான வதந்திகளை  நம்பத் தேவையில்லை.    தைரியமா இருங்க. தலைவர் நல்லா இருக்கிறார். விரைவில் தலைவர் அவர்கள் வீடு திரும்புவார் என்பதை உங்களுக்கு இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி என பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.