இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அறிவித்ததின்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக மாற்றமின்றி தொடர உள்ளது. வங்கிகள் குறுகிய காலத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறும் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில், இன்றைய அறிவிப்புக்கு முன் 0.5% குறைவாகும் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் விளைவாக வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் அதே நிலையில் தொடரும். வட்டி விகிதம் உயரவில்லை என்பதால், ஏற்கனவே கடன் பெற்றிருப்போர் மற்றும் புதிய கடன் எடுப்போர் நிம்மதியடைந்துள்ளனர்.
