நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும், உங்களுக்கும் சில வருடங்களுக்கு முன்பு இருந்த கடுமையான கருத்து மோதல் மற்றும் பஞ்சாயத்துக்கள் இப்போது தீர்ந்துவிட்டதா என்று செய்தியாளர்கள் நடிகர் ராகவா லாரன்ஸிடம் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிலளித்த லாரன்ஸ், சீமான் அண்ணனுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் பிரச்சனை இருந்தது உண்மைதான் என்று ஓப்பனாக ஒத்துக்கொண்டார்.
ஆனால், அந்த பழைய பிரச்சினைகள் எல்லாம் இப்போதே முடிந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தான் நடித்த ‘ஜிகர்தாண்டா எக்ஸ் எல்’ படம் பார்த்துட்டு அண்ணன் சீமானே தனக்கு போன் பண்ணிப் பேசி பாராட்டினார் என்ற எக்ஸ்ப்ளூசிவ் ரகசியத்தை லாரன்ஸ் உடைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணன் சீமானோட அன்பு எப்போதுமே அதீதமானது என்றும், அவரை நான் எப்போதும் ஒரு அண்ணனாகத்தான் பார்க்கிறேன் என்றும் தனது பேட்டியில் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சீமானுடன் இருந்த பழைய மோதல்கள் குறித்து தான் ஏற்கெனவே ஒரு வீடியோவிலேயே மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்றும், இனிமேலும் அதைப் பற்றி பேச வேண்டியதில்லை என்றும் லாரன்ஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் ‘பளீர்’ முற்றுப்புள்ளி வைத்தார்.
