அரசியல் களத்தில் தனக்கு வரும் எதிர்ப்புகள் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகப் பேசியது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் ஆக்ரோஷமாகவும் மிரட்டலாகவும் பேசியுள்ளார். தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று சும்மா ஒரு வார்த்தை கேட்டதுக்கே இப்போதே அவர்கள் தன் மீது லைட்டாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று லாரன்ஸ் ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார்.

அரசியல் எதிர்ப்பாளர்கள் தன்னைத் தாக்கத் தொடங்கியிருப்பதைத்தான், “எனக்கு அந்த ஸ்மெல் எல்லாம் இப்போவே வருது” எனத் தனது பாணியில் சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் எவ்வளவு அடித்தாலும் அதற்குத் தான் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் கறாராகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது இந்த பிரஸ் மீட்டில் விஜய் சாருக்கு ஆதரவாக ‘தவெக-வின் அம்புக்குறி’ தத்துவமும், ‘வாடகை வீடு’ தத்துவமும் மிகவும் ஓப்பனாகப் பேசியிருக்கிறேன்ல என்று செய்தியாளர்களைப் பார்த்துக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டுவிட்டு அரசியல் எதிர்ப்பாளர்கள் இன்னும் பயங்கரமாகத் தன் மீது அடிப்பாங்க என்று தனக்கு வரும் எதிர்ப்புகளை முன்கூட்டியே கணித்துள்ள லாரன்ஸ், “அடிக்கட்டும் சார், ஒன்னும் பிரச்சனை இல்லை” என அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். எல்லாமே ஒரு விளையாட்டுதானே, களத்தில் இறங்கினால் நாமும் செம்மையாக கேம் ஆடுவோம் என அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு நேருக்கு நேர் மிரட்டலாக சவால் விடுத்துள்ள லாரன்ஸின் இந்த அனல் பறக்கும் பேட்டி, தற்போதும் இணையத்தில் தவெக ரசிகர்களால் தாறுமாறாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.