அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வந்தால் வரப்போகும் எதிர்ப்புகளை எப்படிச் சமாளிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் அதிரடியாகவும் பதிலளித்துள்ளார். தற்போது இருக்கும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் தான் தனது அண்ணனாகவும், அப்பாவாகவும், சொந்தக்காரர்களாகவும்தான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்ட லாரன்ஸ், ஆனால் தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று சும்மா கேட்டதுக்கே இப்போதே அவர்கள் தன் மீது லைட்டாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று போட்டுடைத்துள்ளார்.

அவர்கள் மறைமுகமாகத் தன்னைத் தாக்கத் தொடங்கியிருப்பதைத்தான், “எனக்கு அந்த ஸ்மெல் எல்லாம் வருது” எனத் தனது பாணியில் சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டுள்ளார். ​மேலும், இப்போது தான் தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் ‘அம்புகுறி’, ‘வாடகை வீடு’ தத்துவம் எல்லாம் பேசியதற்காக, அரசியல் எதிர்ப்பாளர்கள் இன்னும் அதிகமாகத் தன்னைத் தாக்குவார்கள் என்றும், அவர்கள் எவ்வளவு அடித்தாலும் பரவாயில்லை என்றும் லாரன்ஸ் சவால் விடுத்துள்ளார்.

அடிக்கட்டும், களத்தில் இறங்கினால் நாமும் செம்மையாக கேம் ஆடுவோம் என்று அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு நேருக்கு நேர் சவால் விடுத்துள்ள அவர், இப்போது சோஷியல் மீடியா ரொம்ப வளர்ந்துவிட்டது என்றும், நீங்கள் நடித்தால் மக்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தான் அரசியலில் நடிக்க மாட்டேன் என்றும், மக்களிடம் எப்போதும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பேன் என்றும் லாரன்ஸ் கொடுத்த இந்த அதிரடி பேட்டி, தவெக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது.