தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகச் செய்தியாளர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் மிகவும் ஆவேசமாகவும் அதிரடியாகவும் பதிலளித்து விஜய்க்குத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் பிரதானப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை ஒரு பிரஸ் மீட் கூட நடத்தவில்லை என்றும், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதையே அவர் தவிர்த்து வருகிறார் என்றும் வைக்கப்படும் தொடர் விமர்சனங்களுக்கு என்ன சொல்கிறீர்கள் எனச் செய்தியாளர்கள் லாரன்ஸிடம் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்குத் தனது அசல் பாணியில் நறுக் பதிலடி கொடுத்த லாரன்ஸ், விஜய் சார் பிரஸ் மீட் வைக்காமல் இருப்பதற்குப் பின்னாடி கண்டிப்பா ஏதாவது ஒரு தகுந்த காரணம் இருக்கும் என்று கூறி விஜய்யின் அமைதிக்கான நியாயத்தை ஓப்பனாகப் பேசினார். அத்தோடு நிறுத்தாமல் விமர்சகர்களின் வாயை டோட்டலாக அடைக்கும் வகையில் ஒரு மாஸான கேள்வியையும் லாரன்ஸ் முன்வைத்துள்ளார். அதை விடுங்க, உங்களுக்குச் சும்மா கேமரா முன்னாடி உட்கார்ந்து பேசிட்டே இருக்கிறவங்க வேணுமா, இல்ல நேரடியாகக் காரியத்தில் இறங்கிச் செயல்படுறவங்க வேணுமா என்பதை மக்கள் நீங்கதான் சார் டிசைட் பண்ணனும் எனச் செய்தியாளர்களைப் பார்த்துக் கறாராகக் கேட்டுள்ளார்.
கேமரா முன்னால் பேசி விவாதம் செய்வதை விட, களத்தில் இறங்கி வேலை செய்வதுதான் முக்கியம் என லாரன்ஸ் பேசியுள்ள இந்த எக்ஸ்ப்ளூசிவ் பேட்டி, தற்போதும் தவெக ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
