விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் ‘தற்குறிகள்’ என எதிர்க்கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் நடிகர் ராகவா லாரன்ஸிடம் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு மிகவும் ஆவேசமாகவும், அனல் பறக்கும் வகையிலும் பதிலடி கொடுத்துள்ளார் லாரன்ஸ்.

ஒருத்தர் கண் மூடி கண் திறப்பதற்குள் இவ்வளவு வேகமாக வளர்ந்து வந்துட்டாங்கன்னா, அவங்களை வரவிடக் கூடாதுன்ற பொறாமையில்தான் மத்தவங்க அப்படித் திட்டுவாங்க என்று லாரன்ஸ் மிக ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார். மேலும், தவெக தொண்டர்களுக்குத் தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். ​தொடர்ந்து பேசிய அவர், விமர்சகர்களின் பார்வையில் அது தற்குறியாக இருக்கலாம்; ஆனால் தனது பார்வையில் அது ‘தவெக-வின் ஷார்ப்பான அம்புக்குறி’ என்று மிகக் கறாராகப் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த அம்புக்குறி எப்படின்னா, எவ்வளவு பெரிய மலையாக இருந்தாலும் உடைக்கும், அதே சமயம் நுழைவதற்கு முடியாத இடங்களிலும் நுழையும் என்று லாரன்ஸ் ஒரு மாஸ் பஞ்ச் தத்துவத்தை விளக்கியுள்ளார். தனது கையை வச்சு ஒரே அடியாக அடிச்சு இன்னைக்கு டாப்ல உட்கார்ந்துட்டாங்க என்று விஜய் ரசிகர்களின் அதிரடி வளர்ச்சியைப் பாராட்டியுள்ள லாரன்ஸின் இந்த மரண மாஸ் கவுண்டர், தற்போது இணையத்தில் தவெக தொண்டர்களால் பயங்கரமாகக் கொண்டாடப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.