அசாம் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் தாய் பின்னால அமர்ந்து சென்ற சிறுவனுக்கு, பைக்கர் ஒருவர் அழகான டாம் அண்ட் ஜெர்ரி ஹெல்மெட்டைப் பரிசளித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் வீடியோ கிரியேட்டரான லேகி கோஸ்வாமி என்பவர், தனது பைக்கில் செல்லும்போது ஒரு பெண் தனது மகனை ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டரின் பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்வதைக் கவனித்தார். உடனடியாக அவர்கள் அருகே தனது வாகனத்தை நிறுத்தி, சிறுவனின் பாதுகாப்புக் குறித்துத் தாயிடம் கனிவுடன் பேசினார்.

வெறுமனே அறிவுரை மட்டும் கூறாமல், தான் வைத்திருந்த கார்ட்டூன் படங்கள் பொறித்த சிறுவர்களுக்கான ஹெல்மெட்டை அந்தச் சிறுவனுக்கு அன்பளிப்பாக வழங்கினார். மழைக்காலத்தில் குவஹாத்தி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் பள்ளங்கள் தெரியாமல் போக வாய்ப்புள்ளதால், குழந்தைக்கு ஹெல்மெட் அணிவிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் அந்தத் தாயிடம் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளுக்குப் பிடித்த டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படம் பொறிக்கப்பட்டிருந்ததால், அந்தச் சிறுவனும் ஹெல்மெட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டான். இனி பள்ளிக்குச் செல்லும்போது தவறாமல் ஹெல்மெட் அணிவித்து அழைத்துச் செல்லுமாறு அந்தப் பெண்ணிடம் பைக்கர் அன்பாகக் கேட்டுக்கொண்டார்.

A bike rider in Assam saw a woman riding a scooty with her son.

RIDER: Didi, I have a small helmet. Can I give it to the boy? It’s a child’s helmet 😅

Whenever you drop him at school, please make sure he wears a helmet.

With the kind of rain we’re getting in Guwahati, roads… pic.twitter.com/30ocoYlQbZ

— Lakshay Mehta (@lakshaymehta08) August 16, 2026

“>

தெருவில் கண்ட ஒரு அறியாத குழந்தையின் மீது அக்கறை கொண்டு, சாலைப் பாதுகாப்பை உணர்த்திய அந்த பைக்கரின் நற்செயலைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.