அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுடன் இணைந்து மெக்சிகோ கூட்டு நடத்தும் உரிமை பெற்றுப் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில், மைதானத்தில் டெகிலா (Tequila) மதுபானத்திற்கு அரசு கடுமையான தடை விதித்துள்ள நிலையிலும் கூட, மெக்சிகோ ரசிகர் ஒருவர் யாருக்கும் சந்தேகம் வராதபடி மிக நூதனமான முறையில் மதுபானத்தை மைதானத்திற்குள் கள்ளத்தனமாகத் தூக்கிச் சென்ற 20 விநாடிகள் கொண்ட மிரட்டலான வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ‘Group-A’ பிரிவில் நடந்த தங்களது முதல் முக்கியப் போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவைத் துவம்சம் செய்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் மெக்சிகோ அணி ஒரு  குதிரையாக உருவெடுத்துப் பெரிய வரலாற்றுச் சாதனைகளைப் படைக்கத் தயாராகி வரும் வேளையில், மைதானத்தில் விளையாடும் வீரர்களை விட தற்பொழுது கேலரியில் அமர்ந்திருந்த மெக்சிகோ ரசிகர் ஒருவரின் அதிரடிச் செயல் தான் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மைதானத்திற்குள் எந்தவொரு காதுக்கும் விஷயம் கசியாதவாறு, அரசாங்கத்தின் கடுமையான மதுத் தடையையும் மீறி, அந்த பலே ரசிகர் செய்த தில்லாலங்கடி  ரகசிய உத்தியை மற்றொரு ரசிகர் தனது கேமராவில் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ள இந்த கலகலப்பான வைரல் செய்தி தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.