சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமிக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய ‘தகைசால் தமிழர்’ விருதை முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவித்தார். இவ்விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் விருதுத் தொகையாக வழங்கப்பட்டது. தகைசால் தமிழர் விருது பெற்ற கிருஷ்ணசாமி, பாமகவின் சௌமியா அன்புமணியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனதைத் தொடர்ந்து, அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக மருத்துவர் மோகனுக்கு ‘அப்துல் கலாம் விருது’ மற்றும் வீர தீரச் செயல்களுக்காகக் கவ்சின் பானு சந்த்வுக்கு ‘கல்பனா சாவ்லா விருது’ ஆகிய விருதுகளை முதலமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.
அனைத்து விருதுகளுடனும் அதற்கான நிதியுதவி மற்றும் விருதுத் தொகையும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது. சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அமைந்த இந்நிகழ்வு சுதந்திர தின விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.
