பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில், சுதந்திர தின விழா ஒன்றில் கேக் வெட்டிய பிறகு ஏற்பட்ட பரபரப்பு தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடியோவில், நிகழ்ச்சியில் பெரிய கேக் ஒன்று வெட்டப்படுகிறது. பின்னர் அங்கு கூடியிருந்தவர்களுக்கு கேக் வழங்கும் பணி தொடங்குகிறது. ஆரம்பத்தில் அனைவரும் அமைதியாக காத்திருப்பது போல தெரிகிறது. ஆனால், சில நொடிகளில் கூட்டத்தில் இருந்த சிலர் முறையாக விநியோகம் செய்யப்படுவதற்காக காத்திருக்காமல் கேக்கை எடுக்க முயற்சிக்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Abdullah Nawab (@legendpsh)

இதையடுத்து மற்றவர்களும் கேக்கை எடுக்க முண்டியடித்ததால் அங்கு திடீரென குழப்பமான சூழல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கேக்கை பெற முயன்றதால், விழா நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடியோவை பார்த்த பலரும், சுதந்திர தினம் போன்ற முக்கியமான நிகழ்ச்சியில் இதுபோன்ற ஒழுங்கற்ற செயல் நடந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த சம்பவம் எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.