உத்தரபிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் சிங் பெட்ரோல் பம்ப் அருகே உள்ள மொஹல்லா காடியானா பகுதியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு முதலை தெருவில் நடந்து சென்றது.
வீதியில் நாய்கள் சத்தமாகக் குரைத்ததை தொடர்ந்து வெளியே பார்த்த மக்கள், சுறுசுறுப்புடன் முதலை நடமாடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது அருகிலுள்ள கங்கை ஆற்றில் இருந்து வடிகால் வழியாக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
➡️#शाहजहांपुर में गदियाना मोहल्ले में सड़क पर घूमते घूमते मगरमच्छ एक कार में घुस गया।
➡️स्थानीय लोगों ने बड़ी मुश्किल से मगरमच्छ को पकड़ा और वन विभाग की टीम को सुरक्षित सौंप दिया। pic.twitter.com/BO6JFPLBeN— AIR News Lucknow (@airnews_lucknow) August 4, 2025
உடனே பொதுமக்கள் ஒன்று கூடி முதலை பிடிக்க முயற்சி செய்தனர். கயிறு கொண்டு அதன் வாயை கட்டி, சுமார் 2 மணி நேரம் போராடிய பிறகு, அந்த முதலை ஒரு காரில் அடைக்கப்பட்டது. இடத்தில் வனத்துறையினர் இல்லாததால், தற்காலிகமாக பாதுகாப்பு ஏற்பாடு செய்து, ஹயாத்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டது.
காலை நடந்த இந்த சம்பவத்தைக் காண மக்கள் கூட்டம் திரண்டனர். அடுத்த நாள் காலை 9:30 மணியளவில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, முதலைக்கான சிறப்பு கூண்டில் மாற்றி கொண்டு சென்றனர்.
கர்ரா ஆற்றிலிருந்து பண்ணை நிலம் வழியாக முதலை நுழைந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம், மழைக்காலத்தில் குடிநீர் மற்றும் வடிகால்கள் வழியாக விலங்குகள் நுழையக் கூடிய அபாயங்களை உணர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
