உத்தரப்பிரதேசம், கெளசாம்பி மாவட்டம் சாரஸ்வான் வட்டத்தில் உள்ள கேர்வா கூட்டு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நந்த்லால் சிங் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சம்பந்தப்பட்ட ஆசிரியர், அரசு வழங்கிய டேப்லெட்டில் அவதூறு காணொளிகளை மாணவியருக்கு காட்டியதுடன், சில மாணவிகளை அனாகரீகமாகத் தொட்டதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தலைமை ஆசிரியரின் செயல் பற்றி கூறியுள்ளனர்.
🔘शिक्षा के मंदिर में अश्लीलता की पाठशाला !
🔘हेड मास्टर पर छात्राओं को अश्लील वीडियो दिखाने का आरोप
🔘ग्रामीणों और परिवार ने हेड मास्टर को जमकर पीटा
🔘मारपीट का वीडियो सोशल मीडिया पर वायरल
🔘BSA ने आरोपी हेड मास्टर को किया निलंबित
🔘सरसवां विकास खंड के खेरवा कंपोजिट… pic.twitter.com/Adk7wUIX75— JMD NEWS (@jmdnewsflash) August 5, 2025
உடனே பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் நேரடியாக சென்று, அவரை அடித்து தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாவட்ட அடிப்படை கல்வி அலுவலர் (BSA) நந்த்லால் சிங்கை இடைநீக்கம் செய்து, அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மஞ்சன்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நந்த்லால் சிங்கை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. மாணவிகள் மீது ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு மற்றும் பள்ளியில் மாணவியரின் பாதுகாப்பு மீதான கவலை காரணமாக, பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
