பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் சமீபத்தில் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அதாவது அன்புமணி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை கடிதம் அனுப்பியும் பதிலளிக்காததால் அந்த குற்றங்களை ஒப்புக்கொண்டதாக வைத்துக்கொண்டு அவரைக் கட்சி நலனுக்காக கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருள் உட்பட முக்கிய ராமதாஸ் தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் தற்போது செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் தைலாபுரத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு சமூக வலைதளத்தில்  ஒரு செய்தி பரவி வருவதாகவும் ஐயா ராமதாசை ஜிகே மணி மற்றும் எம்எல்ஏ அருள் போன்றவர்கள் கொலை செய்துவிட்டு அந்த பழியை சின்னய்யா மீது போட பார்க்கின்றனர். நம்பியார் டெக்னிக். என்றுள்ளது. இதற்கான ஆதாரமும் இருக்கிறது. இதேபோன்று ராமதாஸின் கழுத்தில் கால் வைத்து தலைவாணியை வைத்து அழுத்தி  ஏன் கொல்லக்கூடாது என்றும் செய்தி போட்டுள்ளனர்.

இதற்கான ஆதாரமும் இருக்கிறது என்று கூறி அந்த பதிவிற்கான ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தை காண்பித்தனர். பின்னர் பாமக எம்எல்ஏ அருள் பேசும் போது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது ஐயாவை அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனரோ என்று கூறினார். மேலும் ராமதாசை கொலை செய்ய திட்டமிடுவதாக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டினை கூறியது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராமதாஸ் கொலை செய்யப்படுவார் என்று அன்புமணி தரப்பினர் சமூகவலைக தளங்களில் தொடர்ந்து செய்தி பரப்புவதாகவும் கூறினர்.