கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற போது மாணவி பிரேமா என்பவர் மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். அதாவது ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்று அந்த மாணவி பிரேமா கவலைப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவிக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார். நேற்று நடந்த கல்வியில் தமிழ்நாடு சிறந்த விழாவின்போது பணி நியமன ஆணையை மாணவி பிரேமா பெற்றுக்கொண்டு தன் தந்தையிடம் வழங்கினார்.

அப்போது தன் அப்பா பற்றி மிகவும் கவலைப்பட்ட அந்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதில் அளித்து புதிய வீடு கட்டித்தர உத்தரவு வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை மாணவி பிரேமா குடும்பத்தினரிடம் வழங்கினார்.