தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக்கொடி மீது தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது இந்த அமைப்பு தமிழக அரசின் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் கொடி இருக்கும் நிலையில் அதே நிறத்தில் தமிழக வெற்றிக்கழகமும் கொடி பயன்படுத்துவதால் அவர்களது கொடியில் இருக்கும் நிறத்தை நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்னும் 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
