தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 520 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அசையும் சொத்துகள்: ரூ. 404.58 கோடி, அசையா சொத்துகள்: ரூ. 115.13 கோடி ஆகும்.

விஜய்யிடம் மொத்தம் ரூ. 7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. இதில் சாதாரண மாருதி ஸ்விஃப்ட் முதல் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) கார்கள் வரை அடங்கும். அதன்படி  BMW 530, Toyota Lexus 350, Toyota Vellfire, BMW i7, மற்றும் Maruti Swift.
இவற்றுடன் மிக எளிமையான TVS XL Super இருசக்கர வாகனமும் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள மற்றொரு தகவல் என்னவென்றால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு அவரே கடன் வழங்கியுள்ளார். அதாவது  மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12 கோடி, தந்தை சந்திரசேகர்: ரூ. 3 கோடி, தாய் ஷோபா: ரூ. 87 லட்சம், மகன் ஜேசன் சஞ்சய்: ரூ. 8 லட்சம், மகள் ஷாஷா: ரூ. 4 லட்சம் இவ்வாறு தனது குடும்பத்தினர் அனைவருக்கும் விஜய் கடன் உதவி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ள விஜய்யின் இந்தச் சொத்து விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும், ஒரு சாமானியனைப் போல டி.வி.எஸ் எக்ஸ்.எல் (TVS XL) வாகனத்தை அவர் வைத்திருப்பது அவரது தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.