தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களைப் பகிர்ந்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அது, தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரே கடன் வழங்கியிருப்பதுதான்.
அதாவது ரூ. 520 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைக்கும் வளர்ச்சிக்கும் அவரே முன்னின்று உதவியுள்ளது அவரது தரப்பில் காட்டப்பட்டுள்ளது. வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, அவரது குடும்பத்தினர் அவருக்குக் கடன்பட்டுள்ளனர்.
அதன்படி சங்கீதா (மனைவி): ரூ. 12 கோடி
எஸ்.ஏ. சந்திரசேகர் (தந்தை): ரூ. 3 கோடி
ஷோபா (தாய்): ரூ. 87 லட்சம்
ஜேசன் சஞ்சய் (மகன்): ரூ. 8 லட்சம்
ஷாஷா (மகள்): ரூ. 4 லட்சம்
பொதுவாக அரசியல் தலைவர்களின் சொத்து விவரங்களில் தங்களுக்குப் பிறர் வழங்கிய கடன்கள் அல்லது தாங்கள் பிறருக்கு வழங்கிய கடன்கள் குறித்த விவரங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், விஜய் தனது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கடன் கொடுத்து, அந்த விவரங்களை மிகத் துல்லியமாக வேட்புமனுவில் பதிவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் அதே நேரத்தில் தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பணத்தை அவர் கடனாக கொடுத்து குடும்பமே அவருக்கு கடனாளியாக இருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
