தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சொத்து விபரங்கள் குறித்து வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார். அதன்படி அவருக்கு மொத்தம் 520 கோடி சொத்து இருக்கும் நிலையில் ரூ.404.58 கோடி அசையா சொத்துக்களும், ரூ.115.13 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பு மட்டுமே சுமார் 7.52 கோடி ஆகும். அவரது வங்கி கணக்குகளில் 278 கோடி பணமும், 110 சவரன் தங்க நகைகளும், ஒரு கோடி மதிப்பிலான வைர நகைகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரிடம் ஐந்து சொகுசு கார்கள் இருக்கும் நிலையில், நீலாங்கரை, சோளிங்கர் மற்றும் சாலிகிராமம் ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருமணம் ஆக 25 வருஷங்களில் அவர் தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் எந்தவிதமான சொத்துக்களும் வாங்காத நிலையில் தன்னுடைய பெயரில் மட்டுமே அனைத்து சொத்துக்களையும் வாங்கியுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள மற்றொரு தகவல் என்னவென்றால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு அவரே கடன் வழங்கியுள்ளார். அதாவது  மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12 கோடி, தந்தை சந்திரசேகர்: ரூ. 3 கோடி, தாய் ஷோபா: ரூ. 87 லட்சம், மகன் ஜேசன் சஞ்சய்: ரூ. 8 லட்சம், மகள் ஷாஷா: ரூ. 4 லட்சம் இவ்வாறு தனது குடும்பத்தினர் அனைவருக்கும் விஜய் கடன் உதவி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.