அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்யபாமா ஆகியோர் சற்று நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கிறார்கள். நேற்று தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு சென்னை பட்டினம் பாக்கம் இல்லத்தில் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக திமுக முக்கிய அமைச்சர்களும் செங்கோட்டையனை அழைத்து பேசிய நிலையில் அவரை தங்கள் கட்சிக்கு அழைத்ததாக கூறப்படும் நிலையில் அதனை செங்கோட்டையன் மறுத்ததாகவும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அது உறுதியாககிவிட்டது.
தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்திய பாமா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகம் வந்துள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் அவர்களை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனும் சற்று நேரத்தில் வருகை புரிய இருக்கும் நிலையில் அவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக்கழகத்தில் இருக்கிறார். இதேபோன்று புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹசானா உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர்.
அவருக்கு பொதுச்செயலாளர் ஆனந்துக்கு இணையான பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கும் செங்கோட்டையன் நான்கு முதல்வர்களின் கீழ் பணியாற்றிய நிலையில் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்று பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
