அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார். இந்த முக்கிய இணைப்பு நிகழ்வு காலை 10 மணிக்கு மேல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தவெக தலைவர் விஜய் தற்போது நீலாங்கரை இல்லத்தில் இருந்து, இணைப்பு நிகழ்வு நடைபெறும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குப் புறப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இன்று தவெக அலுவலகத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ‘சூப்பர் சீனியராக’ இருந்த செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணைவது, எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் புதிய பலத்தைச் சேர்க்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.