தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தின் போது நேற்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட குழந்தைகள் பெண்கள் என 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்கள் கதறியழும் காட்சிகள், கரூரில் நீங்காத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மற்றும் நாளை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.